Wednesday, January 19, 2011

எட்டு திருமண முறைகள்

சத்யார்த்தப் பிரகாசம்
- மகரிஷி தயாநந்த ஸரஸ்வதி

பக்கம் - 115
விவாஹ லக்ஷணம்
ब्राम्हो दैवस्तथैवार्षः प्राजापत्यस्तथासुरः ।
गान्धर्वो राक्षसश्चैव पैशाचश्चाष्टमोधमः ।। (மனு. 6-21)
விவாகம் எட்டு வகையாகும் – பிரம்ஹ, தேவ, ஆர்ஷ, பிராஜாபத்ய, அசுர, காந்தர்வ, ராக்ஷஸ, பைஶாச விவாஹங்கள்.
  1. பிரம்ஹ விவாகம் – பிரமசரியத்தால் நிறைவான கல்வியும், அறநெறியும், சீலமும் பொலியும் வாலிபனும், கன்னியும் ஒருவருக்கொருவர் மனமொப்பிச் செய்து கொள்வதாகும்.
  2. தேவம் – பெரிய வேள்வியில் ரித்விக்காயிருந்து காரியம் நடத்தும் அறிஞருக்கு, பெண்ணை நன்றாயலங்கரித்துத் தந்தை தருவது தேவ விவாகமாகும்.
  3. ஆர்ஷம் – வரனிடம் ஏதாவது பணம் வாங்கிக் கொண்டு பெண்ணைத் தருதல் ஆர்ஷம்.
  4. பிராஜாபத்யம் – விவாக தர்மாபிவிருத்திக்கே இருவரும் மனமொப்பிக் கூடுதல் பிராஜாபத்யம்.
பக்கம் -116.
  1. ஆஸுர – வரனும், கன்னியும் ஏதாவது வாங்கிக்கொண்டு மணம் புரிதல் ஆஸுரம்.
  2. காந்தர்வ – நியமமின்றி, காலமின்றி காமத்தால் ஒருவரையொருவர் விரும்பிச் சேர்தல் காந்தர்வம்.
  3. ராக்ஷஸ – போர்புரிந்து பலாத்காரமாகத் தூக்கிச் சென்று அல்லது வஞ்சத்தால் பெண்ணைக் கூடல் ராக்ஷஸம்.
  4. பைஶாச – உறங்கும் அல்லது மது மயக்கங்கொள்ளும் அல்லது பைத்தியப் பெண்ணைப் பலாத்காரமாக் கூடல் பைஶாசம்.
இந்த எட்டு வகை மணங்களில் பிரம்ஹ விவாகமே மிகச் சிறந்தது. தேவமும், பிராஜபத்யமும் நடுத்தரம். ஆர்ஷ, ஆஸுர, காந்தர்வ விவாகங்கள் கீழ்த்தரமானவை. ராக்ஷஸம் அதமம். பைஶாசம் அதி அயோக்யத்தனமானது
வேதவிஜ்ஞானம்
– ஸ்ரீ க்ருஷ்ண ப்ரேமி

விவாஹம்
பக்கம் – 573
ब्राम्हो दैवस्तथैवार्षः प्राजापत्यस्तथासुरः ।
गान्धर्वो राक्षसश्चेति पैशाचश्चाष्टमो मतः ।।
मनुः
  1. வேதாத்யயனம் செய்து நல்ல ஶீலமுடைய ஒரு வரனை தானே கூப்பிட்டு பூஜை செய்து கன்யா தானம் செய்வது ப்ராம்ஹம் எனப்படும்.
  2. யாகத்தில் வரிக்கப்பட்ட ரித்விக்கான ப்ராம்ஹணனாகிய வரனுக்கு கன்னிகையை அலங்கரித்து தேவ ப்ரீதிக்காக செய்யும் தானம் தைவம் எனப்படும்.
  3. வரனிடத்திலிருந்து ஓரிரண்டு மாட்டைப் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாக பெண்ணைக் கொடுப்பது ஆர்ஷம் ஆகும்….
  4. இரு வீட்டு பந்துக்களும் முதலில் ஸம்மதித்து வதூ, வரர்களைப் பார்த்து, நீங்கள் இருவரும் சேர்ந்து இல்லறம் நடத்துங்களென்று ஶாஶ்த்ர முறைப்படி சேர்த்து வைப்பது ப்ராஜாபத்யம் என்ற விவாஹம். இதுதான் இப்போது எங்கும் நடப்பதாகும்.
  5. பெண்ணைப் பெற்றவர்களுக்கும், பெண்ணிற்கும் நிரம்பப் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விவாஹம் செய்துகொள்வது ஆஸுர விவாஹமாகும்.
  6. ஆண், பெண் இருவரும் காதலித்து, தாங்களே சேர்ந்து விடுவது காந்தர்வ விவாஹமாகும்.
  7. பந்துக்களுடன் சண்டை செய்து அடித்துப் பிடித்து கன்னிகையைக் கொண்டுவந்து விவாஹம் செய்துகொள்வது ராக்ஷஸ விவாஹமாகும்.
  8. தூங்கும்போது தெரியாமல் புகுந்து பெண்ணை கற்பழிப்பது பைஶாசம் ஆகும்.
ப்ராம்ஹம், தைவம், ஆர்ஷம், ப்ராஜாபத்யம் என்னும் நான்கும் ப்ராம்ஹணர்களுக்குரிய விவாஹமாகும்.
காந்தர்வம், ஆஸுரம், ராக்ஷஸம் இவை க்ஷத்ரியர்களுக்குரிய விவாஹமாகும். வைஶ்ய, ஶூத்ரர்களுக்கும் இவை தகும்.
பைஶாச விவாஹம் பாபம். யாருக்கும் தகாது.
இந்திய பெண்மணிகளில்
- ஸ்வாமீ விவேகாநந்தர்
கூடாத திருமணங்கள்
  1. நெருங்கிய உறவுகளில்
  2. ஸஹோதரர்கள் பிள்ளைகளுக்கு இடையில்
  3. ஸஹோதரிகள் பிள்ளைகளுக்கு இடையில்
  4. சொந்த குடும்பத்தில்
  5. தந்தை, தாய்வழி உறவினர்களுடன்
  6. மணமகன், மணமகளின் ஆறு தலைமுறைகளில் யாருக்கும் குஷ்டரோகம், காஶநோய் இருந்திருந்தால்

No comments:

Post a Comment